வருகிற 17-ந்தேதி மகாளய அமாவாசை : ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை

0 2480
வருகிற 17-ந்தேதி மகாளய அமாவாசை : ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை

வரும் 17ம் தேதி புரட்டாசி மகாளய அமாவாசையன்று, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 1ம் தேதி முதல் பக்தர்கள் மீண்டும் அனுமதிக்கப்பட்ட போதிலும், அக்னி தீர்த்த கடலில் திதி தர்ப்பணம் செய்யவும், கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் 17-ந் தேதி ராமேசுவரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக அக்னி தீர்த்த கடலில் நீராடவும், திதி தர்ப்பணம் செய்யவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments