நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் உயிரை மாய்த்த சோகம்

0 3411
நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத அச்சத்தில்,தமிழகத்தில் நேற்று அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாத அச்சத்தில்,தமிழகத்தில் நேற்று அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை தல்லாகுளம் 6ஆம் பட்டாலியன் காவல்குடியிருப்பில் வசித்து வருபவர் சப்- இன்ஸ்பெக்டர் முருகசுந்தரம். இவரது மகள் ஜோதி ஸ்ரீதுர்கா அரசு பள்ளியில் படித்து 12ஆம் வகுப்பு முடித்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் நேற்று தனது அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதே போல் தருமபுரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா என்பவர், நீட் தேர்வு அச்சதால், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கடந்த 2 ஆண்டுகளாக, நீட் தேர்வு பயிற்சி மேற்கொண்டு வந்தது நிலையில், நேற்று உயிரை மாய்த்துக் கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த இடையன்பரப்பு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மோதிலால் என்ற மாணவரும் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தற்கொலை செய்த மாணவர் மோதிலால்  உடல் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தியபிறகு  செங்கோடன் பாளையத்தில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. 

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் தற்கொலை செய்த மாணவர் ஆதித்யாவின் உடல், தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு, மாணவரின் உடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் மாணவரின் உடல் குடும்பத்தினரிடம் அளிக்கப்பட்டபோது, பிரேத பரிசோதனை தங்களின் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்பட்டுள்ளதாக கூறி, உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாணவரின் உடல் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே வைக்கப்பட்டிருந்தது. மாணவரின் குடும்பத்தினருடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிகாரிகள் நடத்திய தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு, மாணவர் ஆதித்யாவின் உடலை வாங்க குடும்பத்தினர் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ஆதித்யாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments