நாடு முழுவதும் நாளை நீட் தேர்வுகள் தொடக்கம்.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

0 867
நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு தொடங்கவுள்ள நிலையில், தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்குகிற நிலையில், 11 மணிக்கே தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு மையத்துக்கு வரும் போது, ஹால் டிக்கெட் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை மற்றும் விண்ணப்ப படிவத்தில் உள்ள பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தண்ணீர் பாட்டில் மற்றும் 50 மில்லி அளவுக்கு கிருமி நாசினி எடுத்து வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டாயம் முகக்கவசம் அணியவும், 6 அடி இடைவெளியை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments