1.75 லட்சம் வீடுகள்..பயனாளிகளிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி..!

0 1460
மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீடுகளைப் பிரதமர் மோடி பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

மத்தியப் பிரதேசத்தில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீடுகளைப் பிரதமர் மோடி பயனாளிகளிடம் ஒப்படைத்தார். 

நகர்ப்புறங்கள், ஊர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கும் பிரதமர் வீட்டு வசதித் திட்டம் 2015ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

இதன்படி 2022 மார்ச்சுக்குள் மொத்தம் 2 கோடி வீடுகளைக் கட்டிக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட ஒரு லட்சத்து 75 ஆயிரம் வீடுகளைப் பயனாளிகளிடம்  பிரதமர் நரேந்திர மோடி, ஒப்படைத்து அவர்களிடம் உரையாடினார். அப்போது , கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் வளர்ச்சித் திட்டங்கள் தடைபடாமல் நடந்து வருவதாக மோடி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments