கங்கணா வீடு இடிக்கப்பட்டது குறித்து சிவசேனா அரசில் கூட்டணி வகிக்கும் சரத்பவார் கருத்து

0 3983
கங்கணா வீடு இடிக்கப்பட்டது குறித்து சிவசேனா அரசில் கூட்டணி வகிக்கும் சரத்பவார் கருத்து

நடிகை கங்கணாவின் அலுவலகத்தை இடிப்பதற்கு, மும்பை மாநகராட்சிக்கு முகாந்திரம் இருந்தாலும் தற்போதைய சூழலில், அந்த நடவடிக்கை சிலருக்கு சந்தேகத்தை எழுப்ப வாய்ப்பளிப்பதாக, ஆளும் சிவசேனா  அரசில் கூட்டணி வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு கங்கணா பேசியது குறித்து கருத்து தெரிவித்த பவார், இது போன்ற கருத்துகளை தெரிவிப்போருக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிப்பதாக குறிப்பிட்டார்.

இத்தகைய கருத்துகள் மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

காவல்துறையினர் சிறப்பாக கடமையாற்றுகின்றனர் என்று மும்பை  மற்றும் மகாராஷ்டிரா மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் சரத்பவார் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments