கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கோயம்புத்தூரில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை

0 518
கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கோயம்புத்தூரில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனை

கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக கோயம்புத்தூரில் அதிரடி சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், நகைப்பட்டறை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கேரளாவுக்கு கடத்தப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கோவை கருப்ப கவுண்டர் வீதியை சேர்ந்த நந்தகோபாலின் வீடு மற்றும் பட்டறையில் டி.எஸ்.பி. சாகுல் அமீது தலைமையில் 4 பேர் கொண்ட என்.ஏ.ஐ. அதிகாரிகள் குழு திடீரென சோதனையில் ஈடுபட்டது.

சுமார் 7 மணி நேர சோதனைக்கு பிறகு, நகைப்பட்டறை உரிமையாளர் நந்தகோபாலை விசாரணைக்காக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கையோடு அழைத்துச் சென்றனர்.

ரகசிய அறையில் வைத்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்படும் நிலையில், நந்தகோபால் வீட்டில் முக்கிய ஆவணங்கள், தங்கம் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா? எனபது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments