மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட விமானநிலையத்தை சுற்றுச்சூழல் மண்டலமாக மாற்ற அந்நாட்டு அரசு முடிவு

0 589
மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட விமானநிலையத்தை சுற்றுச்சூழல் மண்டலமாக மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

மெக்ஸிகோவில் கைவிடப்பட்ட விமானநிலையத்தை சுற்றுச்சூழல் மண்டலமாக மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

தலைநகர் மெக்ஸிகோ சிட்டியின் கிழக்குப் பகுதியில் 4 ஆயிரத்து 800 ஹெக்டர் பரப்பளவில் 13 பில்லியன் டாலர் மதிப்பில் சர்வதேச விமான நிலையம் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் விமான நிலையம் அமையவிருந்த பகுதி 12 ஆயிரத்து 200 ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்திருந்த டெக்ஸோக்கோ என்ற ஏரியின் ஒரு பகுதியாக இருந்தது.

எனவே அவை சதுப்பு நிலம் என்பதால் விமான நிலையத்தில் தண்ணீர் புகும் நிலை உண்டானது. இதனால் 20 விழுக்காடு பணிகள் நடந்திருந்த நிலையில் அவை அனைத்தும் முடக்கப்பட்டன.

இதையடுத்து கைவிடப்பட்ட விமானநிலையத்தை மிகப் பெரிய பூங்கா உள்ளிட்ட சுற்றுச்சூழல் பகுதியாக மாற்ற மெக்ஸிகோ அரசு முடிவெடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments