நிக்கி கல்ராணி சகோதரி.. சஞ்சனா கல்ராணி கைது…! வேட்டு வைத்த பார்ட்டி

0 6052

பிரபல தமிழ் பட நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தயாரிப்பாளர் ஒருவர் ஆதாரத்துடன் போலீசில் கொடுத்த புகாரால், விருந்துக்குச் சென்று போதை ஏற்றிய நடிகர்- நடிகைகள் கம்பி எண்ணும் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சினிமா உலகில் ஆள்பாதி ஆடைபாதி என்று அரையும் குறையுமான ஆடையுடன் காட்சிகளில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் நடிகை சஞ்சனா கல்ராணி..!

2006 ஆம் ஆண்டில் ஒரு காதல் செய்வீர் என்ற தமிழ் படத்தில் அறிமுகமான சஞ்சனா, தொடர்ந்து கன்னடத்தில் ஏராளமான திரைப்படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்து வந்தார். அவரது தங்கை நிக்கி கல்ராணிக்கு இணையாக தமிழில் ஜொலிக்க முடியாத சஞ்சனா கன்னடத் திரை உலகில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் என்று கூறப்படுகின்றது.

விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு போதையில் போட்ட ஆட்டத்தால் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கலாட்டா செய்தது, தன்னை 16 வயதில் படப்பிடிப்புக்காக பாங்காக் அழைத்து சென்ற கன்னட படக்குழு ஒன்று தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மீடூ புகாரை கூறி அதிரவைத்து விட்டு அந்த புகாரை அவரே வாபஸ் பெற்றது எல்லாம் சஞ்சனாவின் கடந்தகால வரலாறு..!

அந்தவகையில் கலர் மிட்டாய்கள் போல இருக்கும் எம்.டி.எம்.ஏ (MDMA) மற்றும் ஸ்டாம்பு போல நாக்கில் வைத்துக் கொண்டு போதை ஏற்றும் எஸ்.எஸ்.டி (SST) உள்ளிட்ட போதை வஸ்துக்களை திரை உலகினருக்கு சப்ளை செய்து வந்த டிவி நடிகை அனிகா, அவரது கூட்டாளிகளான ரவீந்திரன், அனுப் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த போதைப் பொருள் சப்ளை குறித்து தயாரிப்பாளர் இந்திரலங்கேஷ் என்பவர் பெங்களூரு மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

அதில் நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்ட 15 பேரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் எப்படி போதைப் பொருளை கன்னட திரை உலகிற்குள் பரவ விடுகின்றனர் என்ற விபரத்தையும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இது தொடர்பாக விசாரிப்பதற்கு 15 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இதில் ராகினி திவேதியும் சஞ்சனாவும் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் சட்டப்படி எதிர் கொள்ளப் போவதாக மீடியாக்களிடம் பேசி வந்தனர்.

முதலில் ராகினி திவேதியை கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்த காவல்துறையினர், அதன் தொடர்ச்சியாக ஆண் நண்பர் ராகுல் என்பவருடன் சேர்ந்து பல்வேறு விருந்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வந்த சஞ்சனா கல்ராணியின் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்திய காவல்துறையினர் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்

சஞ்சனா கல்ராணி மூலமாக இந்த போதை மருந்து பாட்டிகளில் சப்ளை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து காவல்துறையினர் விரிவ்சான விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்கில் நடிகைகள் அனிகா, ராகினி திவேதி, சஞ்சனா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாண்டல் வுட் என்றழைக்கப்படும் கன்னட திரை உலகில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் , கோலிவுட்டிலும் நடிகர்-நடிகைகள் சிலர் இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் சினிமா வாழ்க்கையை தொலைத்துள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments