மீன் ஏற்றி வந்த லாரி மோதி ஏற்பட்ட கோர விபத்தில் 5 பேர் பலி.. மரணித்த மனிதம்..!

0 3359

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மீன் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம், கார் மீது அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட கோர விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

பரங்கிபேட்டையில் இருந்து சேலம் நோக்கி மீன் ஏற்றி சென்ற லாரி பெரியநசலூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதியது.

பிறகு நயினார் பாளையத்தில் இருந்து குளஞ்சிநாதர் கோயிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வந்த கார் மீதும் மோதி லாரி கவிழ்ந்தது. இதில், 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலும், ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

காரில் இருந்த குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயங்களுடன் வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கி இறந்து கிடந்தவர்களை சற்றும் பொருட்படுத்தாமல், அப்பகுதி மக்கள் மீன் லாரியில் இருந்து கொத்து கொத்தாக மீன்களை அள்ளிச் சென்றனர்.

இதனிடையே விபத்து நிகழ்ந்த இடத்தில் கடலூர் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ அபிநவ் ஆய்வு நடத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments