வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

0 1647
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

10 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், உள்ளிட்ட10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments