மேலும் 4 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. சனி காலை 8 மணிக்கு முன்பதிவு..!

0 2393
தமிழகத்தில் மேலும் 4 தடங்களில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 4 தடங்களில் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. செங்கோட்டை - சென்னை எழும்பூர் இடையே வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதேபோல் சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி, சென்னை சென்ட்ரல் - மேட்டுப்பாளையம், திருச்சி - நாகர்கோவில் ஆகிய நகரங்களிடையே நாள்தோறும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும். முன்பதிவு உறுதிசெய்யப்பட்ட பயணிகள் மட்டுமே நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுவர். வெப்பநிலை அறியும் சோதனைக்காகப் பயணிகள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன் நிலையத்துக்கு வந்துவிட வேண்டும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments