அமெரிக்காவில் இருந்து.., அடையாறில் மோசடி

0 42101
சென்னையில் இயங்கும் பிரான்ஸ் நாட்டின் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றின் முதன்மை செயல் அதிகாரியாக இருப்பவர் பிரான்சிஸ் ஆண்டனி பெனுகர். கடந்த 11-ம் தேதி இவரது வங்கி கணக்கில் இருந்து 46 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது.

சென்னையில் இயங்கும் பிரான்ஸ் நாட்டின் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றின் முதன்மை செயல் அதிகாரியாக இருப்பவர் பிரான்சிஸ் ஆண்டனி பெனுகர். கடந்த 11-ம் தேதி இவரது வங்கி கணக்கில் இருந்து 46 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி வந்துள்ளது.

பிரான்சிஸ் ஆண்டனியின் வங்கி கணக்கு ஆர்பிஎல் வங்கியில் உள்ளது. தொழில் தொடர்பான பயணமாக பல்வேறு வெளிநாடுகளுக்கு அவர் சென்று வருவதால், அவர் பயன்படுத்தும் சர்வதேச டெபிட் கார்டை, போலியாக தயாரித்து பணம் எடுத்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்ட பிரான்சிஸ் ஆண்டனி, உடனடியாக தனது வீட்டிற்கு அருகில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் சிறு தொகையை எடுத்துக் கொண்டு அதற்கான ஆதாரத்தையும் எடுத்துக் கொண்டு அடையாறு காவல் மாவட்ட சைபர் பிரிவில் புகார் அளித்தார்.

முதற்கட்ட விசாரணையில், மோசடி நபர் அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் இருந்துக் கொண்டு, டார்கெட்.காம் எனும் இணைய தளத்தில் போலி டெபிட் கார்டு மூலம் பொருள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மோசடி பேர் வழி வாங்கிய பொருள் டெலிவரி செய்வதற்கு தயாராவதற்கு முன்பு சுதாரித்து கொண்ட போலீசார், வங்கி மூலம் சம்மந்தப்பட்ட அமெரிக்காவில் உள்ள அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டு, மோசடி நபர் போலி கார்டு மூலம் பரிவர்த்தனை செய்திருப்பதை தெரிவித்தனர். இந்த முயற்சியின் மூலம் பிரான்சிஸ் ஆண்டனியின் வங்கி கணக்கிற்கு, 46,819 ரூபாய் திருப்பி செலுத்தப்பட்டது.

பொதுவாக ஓ.டி.பி மூலமும், போலி டெபிட் மற்றும் கிரிடிட் கார்டுகள் மூலமும் கொள்ளையடிக்கப்படும் பணத்தை மீட்பதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், 24 மணி நேரத்திற்குள் காவல் துறையையும், வங்கியையும் அணுகினாலே பெரும்பாலான வழக்குகளில் பணத்தை மீட்க முடியும் என்கின்றனர் சைபர் கிரைம் போலீசார்.

சமீபத்தில் சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் தனித்தனியாக சைபர் கிரைம் தொடங்கப்பட்டுள்ளதால், அந்தந்த பகுதியில் நடக்கும் இது போன்ற சைபர் குற்றங்களில் கவனம் செலுத்தி உடனடி தீர்வை பெற முடிகிறது என்கின்றனர் காவல் துறை அதிகாரிகள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments