ஜப்பான் பிரதமராக யோஷிஹைட் சுகா நியமிக்கப்பட வாய்ப்பு

0 1247
ஜப்பான் பிரதமராக யோஷிஹைட் சுகா நியமிக்கப்பட வாய்ப்பு

ஜப்பான் பிரதமர் பதவியில் யோஷிஹைட் சுகா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உடல் நலக்குறைவை காரணம் காட்டி பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக பிரதமர் ஷின்சோ அபே கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

ஷின்சோ அபே நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளராகவும் அமைச்சரவை செயலாளராகவும் பணியாற்றிய சுகாவுக்கு ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும், 14 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கெடுப்பில் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் மட்டும் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளது சுகாவின் வெற்றி வாய்ப்புக்கு  கூடுதல் வலு சேர்த்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments