வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

0 811
வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு

வைகை அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசனப் பகுதியில் முதல் போக பாசனப் பரப்பான 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்களுக்கு, நாளொன்றுக்கு 900 கன அடி வீதம், 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும், மொத்தம் 120 நாட்களுக்கு 6 ஆயிரத்து,739 கன அடி தண்ணீரினை 31-ம் தேதி முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments