JEE தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து மற்றும் தங்குமிட வசதி - ஒடிசா மாநில அரசு அறிவிப்பு

0 914
JEE தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து மற்றும் தங்குமிட வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

JEE தேர்வெழுதும் மாணவர்களுக்கு இலவசமாக பேருந்து மற்றும் தங்குமிட வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் JEE முதன்மை தேர்வுகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

ஒடிசா மாநிலத்தில் 7 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களிலிருந்து 37 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.

இந்நிலையில் 37 ஆயிரம் மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இலவசமாக பேருந்து மற்றும் தங்குமிட வசதி ஏற்படுத்தி தரப்படும் என ஒடிசா தலைமை செயலாளர் அசிட் திரிபாதி அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் நீட் தேர்வுக்கும் இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments