சிறுமி 8 மாத கர்ப்பம்... பலாத்காரம் செய்த 55 வயது காமுகன் ..! மணமேடையில் மாப்பிள்ளை கைது

0 48658
கிருஷ்ணகிரி அருகே, சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக 55 வயது நபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே, சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக 55 வயது நபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியிடம் அத்துமீறிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்ய மணமேடை ஏறியவர் சிறைக்குச் சென்ற பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குண்டலப்பட்டி கூட்ரோடுபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாய்மாமா வீட்டில் தங்கி படித்து வந்தார். 10 ஆம் வகுப்பு முடித்த பின்னர், தாய் வீட்டிற்கும், தாய்மாமா வீட்டிற்கும் சென்று வந்த நிலையில் அந்த சிறுமியின் வயிறு பெரிதானது.

வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து அந்த சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். சிறுமியை பரிசோதித்த போது அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறியதை கண்டு சிறுமியின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சிறுமிக்கு நடந்தது என்ன ? என்பது குறித்து விசாரித்த போது கடந்த 10 மாதங்களில் 3 பேர் அந்த சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

தாய்மாமா வீட்டில் சிறுமி தனியாக இருந்த நேரத்தில், கூட்டுறவு சங்க முன்னாள் ஊழியரான 55 வயது உதயணன் என்பவர், மதுபோதையில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது. அதே ஊரைச் சேர்ந்த ராம்ராஜ், சக்தி ஆகிய இரு இளைஞர்களும் அத்துமீறியதால், சிறுமி கர்ப்பம் அடைந்ததாகக் கூறுகின்றனர் காவல்துறையினர்.

இதையடுத்து 55 வயது காமுகன் உதயணனை பிடித்து, அப்பகுதி மக்கள் விசாரித்த போது சிறுமியிடம் அத்துமீறியதை ஒப்புக் கொண்டதால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

அதே போல சக்தி என்பவனுக்கு வியாழக்கிழமை திருமணம் நடக்க இருந்த நிலையில், மணமேடையில் பெண்ணுக்காக காத்திருந்த அவனை மாலையும் கழுத்துமாக கைது செய்து அழைத்துச்சென்றதால் ஒரு பெண்ணின் வாழ்க்கை கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டது. இதில் தொடர்புடைய ராமராஜ் என்பவனையும் காவல்துறையினர் சுற்றி வளைத்தனர்.

காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் வயிற்றில் வளரும் சிசுவைக் கலைப்பது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால், காவல்துறையினர் மருத்துவர்களின் ஆலோசனையை கேட்டு வருகின்றனர்.

பெற்றோரும் உற்றாரும் அன்பாக பேசி பழகி இருந்தால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை ஆரம்பத்திலேயே சொல்லி இருப்பாள் என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், பெற்றோர் அடிக்கடி திட்டுவதை விட்டு பெண்பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசினாலே அவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ளலாம் என்கின்றனர்.

அதே நேரத்தில் பதின் பருவ பெண் பிள்ளைகள் வெளி நபர்களுடன் பழகும் போது எச்சரிக்கையாக இல்லாவிட்டால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments