6 மாதங்களில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

0 8973

கடந்த 6 மாதங்களில் அதிகபட்சமாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி, ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73.34 ல் இருந்து 73.28 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக, கடந்த மார்ச் 5 ஆம் தேதிக்குப் பிறகு இதுவே ரூபாயின் அதிகபட்ச மதிப்பாகும்.

இன்றைய பங்கு சந்தையில் ரூபாயின் மதிப்பு 73.50 க்குள் முடிவடைந்தால், அடுத்த வாரம் அது 73 என்ற அளவைத் தொட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. அதே நேரம் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்ததை பயன்படுத்தி கூடுதல் அன்னிய செலாவணியை வாங்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments