ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் இன்று நடக்கிறது.. இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறையுமா?

0 1227

41 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று காணொலி மூலம் நடைபெறுகிறது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக தொழில்கள், உற்பத்தி முடங்கியதால் ஜி.எஸ்.டி வரியைச் செலுத்த முடியாமல் வியாபாரிகள் திணறுகின்றனர். இதனால் மாநில அரசுகளுக்கு கடும் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு வாக்களித்தபடி மாநில அரசுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி பல்வேறு மாநில அரசுகள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில்,  இன்றைய கூட்டத்தில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இருசக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து புதிய வரிவிதிப்பு முறைகளையும் மத்திய அரசு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தாமதமாக செலுத்தப்படும் ஜிஎஸ்டி-க்கான வட்டியை வசூலிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments