”கிரிக்கெட்டுக்காக வாழ்ந்து, கிரிக்கெட்டை சுவாசித்தவர் ரெய்னா” பிரதமர் மோடி புகழாரம்

0 3982
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ள சுரேஷ் ரெய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து, அவருக்கு பிரதமர் மோடி 2 பக்க கடிதம் எழுதியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ள சுரேஷ் ரெய்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து, அவருக்கு பிரதமர் மோடி 2 பக்க கடிதம் எழுதியுள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து கடந்த 15ம் தேதி தோனியும், ரெய்னாவும் ஓய்வு அறிவித்தனர். இதையடுத்து தோனிக்கு வாழ்த்து தெரிவித்து மோடி கடிதம் எழுதினார்.

தற்போது ரெய்னாவுக்கும் மோடி கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ரெய்னா இளையவராகவும், துடிப்பானவராகவும் இருப்பதால் ஓய்வு என்ற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ள மோடி, கிரிக்கெட்டுக்காக வாழ்ந்தீர்கள், கிரிக்கெட்டையை சுவாசித்தீர்கள் எனவும், அவரது பங்களிப்பை வரும் தலைமுறையினர் நினைவுகூர்வார்கள் எனவும் கூறியுள்ளார்.

இக்கடிதத்தை ட்விட்டரில் பகிர்ந்து தனது நன்றியை பிரதமர் மோடிக்கு ரெய்னா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments