கொரோனா நோயாளிகளுக்கான அம்மா கோவிட் - 19 வீட்டு பராமரிப்பு திட்டம்:முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

0 2608
கொரோனா பாதித்து வீட்டில் தனிமைபடுத்தப்பட்டோர் மற்றும் அறிகுறிகள் கொண்டோருக்கு தலா 2500 ரூபாய் மதிப்பில் அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

கொரோனா பாதித்து வீட்டில் தனிமைபடுத்தப்பட்டோர் மற்றும் அறிகுறிகள் கொண்டோருக்கு தலா 2500 ரூபாய் மதிப்பில் அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். 

தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் மூலம் சலுகை விலையில், வீட்டில் தனிமைபடுத்தபட்ட கொரோனா பாதித்தோர், அறிகுறிகள் கொண்டோருக்கு 2500 ரூபாய் மதிப்பில் அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் 14 நாட்களுக்கான தொகுப்பாக, ஒரு பல்ஸ் ஆக்சிமேட்டர் கருவி, ஒரு டிஜிட்டல் தெர்மாமீட்டர் கருவி, 14 முகக்கவசங்கள், ஒரு கைகழுவும் சோப்பு, அதிமதுரம் மற்றும் கபசுரக் குடிநீர் பவுடர் பாக்கெட்டுகள், 60 அமுக்ரா சூரணம்
மாத்திரைகள், 14 வைட்டமின்-சி மாத்திரைகள், 14 ஜின்க் மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகள், கோவிட் கையேடு ஆகியவை அடங்கிய பெட்டகம் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறுநீரக சிறப்பு சிகிச்சை மையத்தையும், சுகாதார துறை சார்பில் கட்டப்பட்ட 4 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில்  80 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ள  கட்டடங்களுக்கும், கடலூர் மாவட்டம் தொழுதூர் கிராமத்தில் 3 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மக்காச்சோளம் மதிப்புக் கூட்டு மையத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மருத்துவத் துறையில்  இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments