இந்தியாவிற்கான சீன ஏற்றுமதி 24.7 சதவீதம் சரிவு என தகவல்

0 4864
கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் சீனா பொருட்களின் இறக்குமதி, சுமார் 24 புள்ளி 7 சதவீதம் வரை குறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சுங்கத்துறை தரவுகளின் அடிப்படையில் வெளியான இந்த தகவலால், இந்தியா உடனான சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எல்லைப் பிரச்சனையை தொடர்ந்து, சீனா பொருட்களுக்கு எதிர்ப்பு கிளம்பியதன் விளைவாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம் நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்து, இந்தியாவில் இருந்து சீனாவிற்கான ஏற்றுமதி 6 புள்ளி 7 சதவிகிதம் அதிகரித்து,சுமார்  83 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments