உலகின் சிறந்த இரண்டாவது பிராண்ட் ஆக ரிலையன்ஸ் குழுமம் தேர்வு

0 5655

உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக பிராண்ட் எனப்படும் சிறந்த தரத்தின் அடையாளமாக, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் தேந்தெடுக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக பியூட்சர் பிராண்டு (future brand) எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பாண்டியில் அதிகபட்சமான வாடிக்கையாளர்களை பெற்ற இரண்டாவது நிறுவனம் என்றும், மிகவும் மரியாதைக்குரிய அந்நிறுவனம் நெறிமுறைகளை கடைபிடித்து செயல்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ச்சி, புதுமையான தயாரிப்புகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றுடன், மக்கள் அந்த குழுமத்துடன் வலுவான உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments