அமெரிக்காவில் அடுத்த 21 நாட்களில் 20000 பேர் இறப்பார்கள்-அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை

0 3352
அடுத்த 21 நாட்களில் மேலும் 20000 அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலியாவார்கள் என அந்த நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 21 நாட்களில் மேலும் 20000 அமெரிக்கர்கள் கொரோனாவுக்கு பலியாவார்கள் என அந்த நாட்டின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 1 லட்சத்து 54 ஆயிரத்து 447 பேர் வைரஸ் தொற்றால் உயிரழந்துள்ளனர். 

வரும் 22 ஆம் தேதி வாக்கில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஆக அதிகரிக்கும் என அமெரிக்காவின்  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. அலபாமா, நியூ ஜெர்சி,கென்டகி, வாஷிங்டன் உள்ளிட்ட மாநிலங்களில்  இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வாயிலாக அமெரிக்காவில் கொரோனா தொற்று வேகமாக பரவும் என எச்சரித்துள்ள பொது சுகாதார நிபுணர்கள், அவர்கள் கூட்டமாக சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதன் மூலம் சமூகத்தில் தொற்றை பரவச் செய்வதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments