மருந்துக்கடைக்காரரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரௌடி சிலம்பரசன் கைது

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே மருந்துக்கடைக்காரரிடம் மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரௌடி போலீசாரிடம் பிடிபட்டான்.
மன்னிவாக்கத்தில் மருந்துக்கடை நடத்தி வரும் வினோத் என்பவரிடம் பணம் கேட்டு, அதே பகுதியைச் சேர்ந்த ரௌடி சிலம்பரசன் என்பவன் செல்போனில் மிரட்டிய ஆடியோ இரு தினங்களுக்கு முன் இணைய வெளிகளில் வைரலானது. இந்த ஆடியோ போலீசாரின் கவனத்துக்குச் சென்ற நிலையில் இரும்புலியூர் பகுதியில் சுற்றித் திரிந்த சிலம்பரசனை கைது செய்துள்ளனர்.
தாம் தேடப்படுவதை அறிந்து ஆந்திரா தப்பிச் செல்லும் முயற்சியில் அவன் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சிலம்பரசன் மீது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவன் கடந்த 22ஆம் தேதிதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளான் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Comments