எலிசபெத் மகாராணி வாழ்ந்த மாளிகையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு

0 1534

மத்திய தரைக்கடலில் உள்ள மால்டா தீவில், 1949 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரை, இங்கிலாந்து அரசி எலிசபெத் வாழ்ந்த இரண்டடுக்கு மாளிகை, அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளது.

திருமணமான புதிதில், எலிசபெத் மகாராணியும், அவரது கணவரும், கடற்படை தளபதியுமான பிலிப்பும் வாழ்ந்த மாளிகை, அவர்கள் சென்ற பின் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்தது.

Villa Guardamangia என்றழைக்கப்படும் இந்த சுண்ணாம்பு கட்டிடத்தை, சட்ட போராட்டத்துக்கு பின், 44 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ள மால்டா அரசு, 88 கோடி ரூபாய் செலவில் அதை புணரமைக்க உள்ளது.

மேலும், இங்கிலாந்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை இக்கட்டிடம் கவர்ந்திழுக்கும் என மால்டா அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments