சாலையோரத்தில் கவிழ்ந்த கார்... கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள்

0 8827
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் சிக்கித் தவித்த இளம் தம்பதியையும் அவர்களின் 7 மாதக் குழந்தையையும் கைகளால் கண்ணாடிகளை உடைத்து பொதுமக்களே மீட்டனர்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான காரில் சிக்கித் தவித்த இளம் தம்பதியையும் அவர்களின் 7 மாதக் குழந்தையையும் கைகளால் கண்ணாடிகளை உடைத்து பொதுமக்களே மீட்டனர்.

மதுரை கூடல்நகரைச் சேர்ந்த வருண்தாஸ், திருச்சியில் மகப்பேறுக்குச் சென்றிருந்த தனது மனைவி ஜான்சி, 7 மாதக் குழந்தையையும் அழைத்துக்கொண்டு காரில் மதுரைக்குத் திரும்பியுள்ளார்.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முக்கண்பாலம் அருகே சென்றபோது காரில் ஒட்டப்பட்டிருந்த இ - பாஸ் காற்றில் பறந்த போது, காரை ஓட்டிக்கொண்டிருந்த வருண்தாஸ் பிடிக்க முற்பட்டுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காரின் கண்ணாடியை உடைத்து 7 மாதக் கைக்குழந்தையும் இளம் தம்பதியையும் மீட்டனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற துவரங்குறிச்சி காவல்துறையினர் தம்பதியரையும் குழந்தையையும் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவிக்குப் பின் மேல்சிகிச்சைக்காக மூவரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ், காவல்துறையினர் வரும் வரை காத்திருக்காமல் பொதுமக்களே விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டதைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments