கேரளா, கர்நாடகாவில் கணிசமான எண்ணிக்கையில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் : ஐநா

0 3738
கேரளா, கர்நாடக மாநிலங்களில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கணிசமாக இருப்பதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடக மாநிலங்களில் ஐஎஸ்ஐஎஸ்  பயங்கரவாதிகள் கணிசமாக இருப்பதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ், அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதிகளை கண்காணிக்கும் ஐ.நா.வின் பகுப்பாய்வு ஆதரவு, தடைகள் கண்காணிப்பு குழுவின்  26ஆவது அறிக்கையில், தாலிபான் கீழ் இந்திய துணை கண்டத்தில் அல்கொய்தா செயல்படுவதாகவும், அதில் வங்கதேசம், இந்தியா, மியான்மர், பாகிஸ்தானை சேர்ந்த 150 முதல் 200 பேர் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய துணை கண்டத்துக்கான அல்கொய்தா தலைவராக ஒசாமா மகமது செயல்படுவதாகவும், முன்னாள் தலைவர் ஆசிம் உமரின் படுகொலைக்கு பதிலடி கொடுக்க இப்பிராந்தியத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்திய கிளையான விலயா ஆப் ஹிந்தில் 180 முதல் 200 பேர் இருப்பதாகவும், அதில் கணிசமான எண்ணிக்கையிலான நபர்கள், கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments