கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை-அமைச்சர்

0 1404
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் ஆகியவற்றை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒருவர் உயிரிழந்த பிறகு அவர் என்ன காரணத்தினால் உயிரிழந்தார் என்று கண்டறிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்த நடைமுறையின் காரணமாக சில கொரோனா மரணங்கள் விடுபட்டு விட்டதால் அதனை அரசு வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments