வடிவேலு பாணியில் நடந்த நூதன 'சம்பவம்’ - கடைக்காரரை ஏமாற்றி கல்லா பெட்டியை அபேஸ் செய்த ஆசாமிகள்!

0 4200

டிவேலு பட காமெடியில் வருவதைப் போல், தரமணியில் உள்ள அரிசி கடை ஒன்றில், அரிசி வாங்குவது போல கடைக்காரரைத் திசைத்திருப்பி ரூ.75 ஆயிரம் பணத்தைத் திருடியுள்ளனர் பலே ஆசாமிகள் இருவர்.

கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் ஒரு காட்சி வரும். அதில் வடிவேலு தன் நண்பர்களுடன் அரிசி கடைக்குச் செல்வார். அங்கு, கடைக் காரரிடம் பேச்சுக் கொடுத்து, கடைக் காரரை ஏமாற்றி தனது கூட்டாளிகளுடன் எடைக் கற்களைத் திருடிச் செல்வார். அதே பாணியிலான ‘சம்பவம்’ ஒன்று தரமணியில் அரங்கேறியுள்ளது.

image

தரமணியில் அரிசி கடை நடத்தி வருபவர் சந்திரன்.  இவருடைய அரிசி கடைக்கு அரிசி வாங்குவதைப் போல நேற்று மாலை இரண்டு நபர்கள் வந்தனர். அவர்கள் கடையில் இருக்கும் எல்லா அரிசியையும் சுட்டிக் காட்டி ’சாம்பிள்’ வாங்கி சோதித்து உள்ளனர். கடைக்காரர் கொடுக்கும் அரிசியை= வாயில் போட்டு, மென்று, ”இது நல்லா இல்லை. அதை எடுங்க” என்று அரை மணி நேரத்துக்கு மேல் சாம்பிள் பார்த்துள்ளனர்.

கடைக்காரரரும், வந்தவர்கள் பெரிய கை போல் தெரிகிறது. எப்படியும் இரண்டு மூன்று மூட்டைகளை விற்றுவிடலாம் என்று சின்சியருடன் ஒவ்வொரு அரிசி மூட்டையையும் பிரித்து சாம்பிள் காட்டியுள்ளார். ஒரு வழியாக சாம்பிள் பார்த்து முடித்து, கடையில் கடைசியாக அடுக்கியிருந்த மூன்று மூட்டை அரிசிகளை வாங்கியுள்ளனர் இரண்டு பேரும்.

”அதன் பிறகு, போதிய பணம் கையில் இல்லை. அருகில் உள்ள ஏடிஎம்கு சென்று பணம் எடுத்து, ஆட்டோவை அழைத்து வருகிறோம்” என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து ’எஸ்’ ஆகியிருக்கிறார்கள். போனவர்கள் போனவர்கள் தான்...  திரும்பி வரவேயில்லை.

இரவு ஏழு மணி வரை கடைக்காரரும் இருவரும் வருவார்கள் என்று காத்திருந்து பார்த்துள்ளார். ஆனால், போனவர்கள் திரும்பி வரவேயில்லை. ஏமாற்றத்துடன் கடையை அடைத்துவிட்டு கல்லா பெட்டியைப் பார்த்துள்ளார். கல்லா பெட்டியில் இருந்த 75,000 ரூபாய் பணம் திருடு போனது அப்போதுதான் தெரிந்தது அவருக்கு.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கடைக்காரர் தரமணி பகுதி முழுவதும் அந்த மர்ம ஆசாமிகளைத் தேடியுள்ளார். அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. இறுதியாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சந்திரன். அவருக்கு ஆறுதல் சொன்ன போலீசார், வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments