கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்

0 6281
எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்றும் ரஜினி ட்வீட்

கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கந்த சஷ்டி கவசத்தை மிகக்கேவலமாக அவதூறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்தி கொந்தளிக்க செய்தவர்கள் மீது, அவர்கள் இந்த ஈனச்செயலை வாழ்வில் மறக்க முடியாதபடி துரிதமாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

மேலும் சம்பந்தப்பட்ட வீடியோக்களை அரசு தலையிட்டு நீக்கியதற்காகவும் மனமார பாராட்டியுள்ள நடிகர் ரஜினிகாந்த், இனிமேலாவது மதத்துவேசமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும், ஒழியணும் என்றும் பதிவிட்டுள்ளார்.

எல்லா மதமும் சம்மதமே, கந்தனுக்கு அரோகரா என்றும் ரஜினி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments