ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 855

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

கொரோனா ஊரடங்கு அமல் காலத்தில் பயங்கரவாதிகளை தேடிபிடித்து பாதுகாப்புப் படையினர் வேட்டையாடி வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் மட்டும் 48 பயங்கரவாதிகள், என்கவுன்டர்களில் கொல்லப்பட்டனர்.

குல்காம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு கமாண்டர் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் சோபியானின் அம்சிபோரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை காலை தேடுதல் வேட்டை நடத்தியபோது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் சண்டை வெடித்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவில்லை. இதுகுறித்து பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments