சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிசிஐடி டி.எஸ்.பி அனில்குமாரிடம் சிபிஐ 4 மணி நேரம் விசாரணை

0 1551

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி "டி.எஸ்.பி" அனில் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள், மதுரையில் 4 மணி நேரம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆத்திக்குளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவல கத்திற்கு அனில் குமாரும் அவரது குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின்போது எடுக்கப்பட்ட புகைப்பட ஆவணங்களை, சிபிஐ அதிகாரிகளிடம் அனில்குமார் ஒப்படைத்தார். ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டபோது, சிபிசிஐடி பதிவு செய்த தகவல்களை ஒப்பீடு செய்து, அதில் உள்ள சந்தேகங்களை சிபிஐ அதிகாரிகள் அனில்குமாரிடம் கேட்டறிந்து ஆவணப்படுத்தினர்.

சுமார் 4 மணி நேரம் நீடித்த சிபிஐ விசாரணை மாலையில் முடிவடைந்ததும், சிபிசிஐடி டிஎஸ்பி அனில் குமாரும் அவரது குழுவினரும் காரில் திருநெல்வேலிக்கு திரும்பினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments