தமிழக அமைச்சர்கள் யாரும் ரஜினியிடம் பேசவில்லை -அமைச்சர் ஜெயக்குமார்

0 1616
அமைச்சர்கள் யாரும் ரஜினியிடம் பேசவில்லை, யாரும் துரோகம் செய்யவில்லை-ஜெயக்குமார்

தமிழக அமைச்சர்கள் யாரும் ரஜினியிடம் பேசவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

தியாகிகள் சங்கரலிங்கனார், ஆர்யா என்கிற பாஷ்யம், செண்பகராமன் ஆகியோரை நினைவுகூர்ந்திடும் வகையில், தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் ஜூலை 17-ம் தேதி மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்படி, சென்னை காந்தி மண்டபம், தியாகிகள் மணிமண்டப முகப்பில் மூவரின் திருவுருவப் படங்களுக்கு, தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் கொரோனா சமூக பரவல் தொடங்கியதா என்பதை ஐசிஎம்ஆரோ, உலக சுகாதார நிறுவனமே அறிவிக்கும் என பதிலளித்தார். இது பற்றி அறிவிப்பு வெளியிட, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கே மருத்துவம் படித்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மதத்தை இழிவு படுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக ஏன் திமுக போராட்டம் நடத்தவில்லை என்றும் ஜெயக்குமார் வினவினார்.

ரஜனி தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், அமைச்சர்கள் யாரும் ரஜினியிடம் பேசவில்லை, யாரும் துரோகம் செய்யவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments