ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து டாடாசுமோ வாகனம் கவிழ்ந்து கோர விபத்து - 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி

0 3105
கோர விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே டாடா சுமோ வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரும்புக்கடை நடத்தி வரும் அண்ணன், தம்பிகள் மூவரும் அவர்களது குடும்பத்தினரும் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு சென்ற நிலையில், மீண்டும் கடையை திறக்க காஞ்சிபுரம் நோக்கி டாடா சுமோ வாகனத்தில் வந்து கொண்டிருந்துள்ளனர்.

திண்டிவனம் அடுத்த பாதிரி அருகே வாகனம் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 8 வயது சிறுமி உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த 2 சிறுவர்கள் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, விபத்து நடந்த இடத்தில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments