அமெரிக்காவில் இருந்து 72 ஆயிரம் எந்திரத் துப்பாக்கிகளை வாங்கும் இந்தியா

0 6190

அமெரிக்காவில் இருந்து 72 ஆயிரம் எந்திரத் துப்பாக்கிகளை வாங்க இந்திய ராணுவம் ஆர்டர் கொடுக்க உள்ளது.

இந்திய ராணுவம் ஏற்கெனவே அமெரிக்காவில் இருந்து 72 ஆயிரம் சிக் 716 வகை எந்திரத் துப்பாக்கிகளை வாங்கியுள்ளது. இந்தத் துப்பாக்கிகள் ராணுவத்தின் வடக்குப் பிரிவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

லடாக்கில் சீனாவுடனான மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது மேலும் 72 ஆயிரம் துப்பாக்கிகளை அமெரிக்காவில் இருந்து வாங்க இந்திய ராணுவம் ஆர்டர் கொடுக்க உள்ளது.

விரைவான கொள்முதல் திட்டத்தின் கீழ் இவை வாங்கப்பட உள்ளன. இந்தத் துப்பாக்கிகள் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் உள்ள வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments