சாத்தான்குளம் இரட்டை கொலை.. கைதான மேலும் 3 காவலர்கள்..! மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

0 2316

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ உட்பட மேலும் 5 போலீசாரில், 3 காவலர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 5 பேரை சிபிசிஐடி ஏற்கெனவே கைது செய்தது. அவர்கள் தற்போது மதுரை மத்திய சிறையில் தனி வீட்டில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தின் போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால் துரை உட்பட மேலும் 14 பேரிடம் நேற்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லதுரை, சமயதுரை, வெயில்முத்து, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய ஐந்து பேருக்கும் தாக்குதலில் பங்கு இருந்தது கண்டறியப்பட்டது.

எனவே அவர்கள் 5 பேரின் பெயர்களையும் கொலை வழக்கில் சேர்த்த சிபிசிஐடி போலீசார், கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.அதில் எஸ்.எஸ்.ஐ பால்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் ஆகிய இருவருக்கும் உடல் நல குறைவு இருந்ததால் அவர்களிருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்ற 3 காவலர்களும், முதலாவதாக 15 நாட்கள் காவலில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே சாத்தான்குளம் காவல் நிலைய விசாரணைக்கு பின்னர் ஜெயராஜ், பென்னிக்ஸ் அடைக்கப்பட்டிருந்த கோவில்பட்டி கிளைச் சிறையில், கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் திடீரென விசாரணை மேற்கொண்டார்.

சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற விசாரணையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் சிறைக்கு கொண்டு வரப்பட்ட போது ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள், மருத்துவ சான்று உள்ளிட்டவற்றை நீதிபதி ஆய்வு செய்வதாக கூறப்படுகிறது. வழக்கு சிபிஐக்கு சென்ற நிலையில், நீதிபதி பாரதிதாசன் திடீரென விசாரணை மேற்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உடல் நலக்குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் பால்துரை மற்றும் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஆகியோரை மதுரை மத்திய சிறைச் சாலையிலுள்ள மருத்துவமனைக்கு மாற்ற உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments