30 கிலோ தங்கம் கடத்தல் விவகாரம் -பிரதமருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம்

0 7678

30 கிலோ கடத்தல் தங்கம் சிக்கிய விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

இப்பிரச்சினையில் கவனம் செலுத்தி தலையிடுமாறு கேட்டுக் கொண்ட பினராயி விஜயன் (Fileshot Out) தூதரக அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த தங்கம் கடத்தல் நடந்திருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் இந்த கடத்தல் சம்பவம் மிகவும் தீவிரமானது என்றும் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அண்மையில் 30 கிலோ கடத்தல் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்ட வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன் அலுவலகம் மற்றும் தூதரக செல்வாக்கைப் பயன்படுத்திய ஸ்வப்னா என்ற பெண்ணால் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

எதிர்க்கட்சியினர் கேரள முதலமைச்சர் மீதே நேரடியாக குற்றம் சாட்டிய நிலையில் விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் தயார் என்று பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே குற்றவாளிகளை தண்டிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுத்திருப்பதாக தெரிவித்துள்ள மத்திய இணை அமைச்சர் வி.முரளிதரன் இந்த கடத்தலில் தொடர்புடைய குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments