இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் விரைவில் விமான சேவை..

0 13949

இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட ஒருசில நாடுகளுக்கு மட்டும் விரைவில் பயணிகள் விமான சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமானப்போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு விமானங்களை இயக்கவும், அந்நாட்டு விமானங்கள் இந்தியாவிற்கு வர அனுமதிக்கவும் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்துடனும் பேசி வருவதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சகத்தின் விதிகளின் கீழ் விமான சேவை நிறுவனங்கள் தகுதி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments