இந்தியாவுக்கு உலக வங்கி ரூ.5,593 கோடி நிதியுதவி..!

0 1751

சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக உலக வங்கியிடம் ஐயாயிரத்து 593 கோடி ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான உடன்பாட்டில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது.

கொரோனா பரவலையடுத்து ஊரடங்கு கடைப்பிடிப்பால் சிறு, குறு நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால் அவற்றுக்குக் கடன் வழங்கிப் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அவசரக் கடன் வழங்குவதற்காக உலக வங்கியிடம் ஐயாயிரத்து 593 கோடி ரூபாய் நிதியுதவி பெறுவதற்கான உடன்பாட்டில் இந்தியா கையொப்பமிட்டுள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இத்துடன் சேர்த்து கொரோனா பேரிடரை எதிர்கொள்ள உலக வங்கி இந்தியாவுக்கு மொத்தம் 20 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்குவது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments