ஊரடங்கு காலத்திற்கான மின் கட்டணம் முந்தைய கட்டணத்தின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும்-தமிழக அரசு

0 5265

ஊரடங்கு காலத்தில், முந்தைய மின் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டே புதிய கட்டணம் கணக்கிடப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கின்போது மின் கணக்கீடு செய்யாததால், வீட்டுப் பயன்பாட்டு மின் நுகர்வோர், முந்தைய கட்டணத்தையே செலுத்தலாம் எனவும், கணக்கீடு செய்தபின், ஏற்கெனவே செலுத்திய தொகையைக் கழித்து விட்டு, மீதியைச் செலுத்தலாம் எனவும் மின் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து, இரண்டு இரண்டு மாதங்களுக்குத் தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மின் வாரியத்தின் கணக்கீட்டுப்படி, கூடுதல் தொகை செலுத்த வேண்டியிருப்பதாகக் கூறி அதற்கான விளக்க மனுவை மனுதாரர் அளித்தார்.

முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டே புதிய கட்டணம் கணக்கிடப்படுமே தவிர, ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஊரடங்கின்போது பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததால், மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து தமிழக அரசின் விளக்கத்தை எழுத்துப் பூர்வமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையைப் புதன்கிழமைக்குத் தள்ளி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments