மேலும் பல சீன செயலிகளையும், இணையதளங்களையும் தடை செய்ய திட்டம்..!

0 4943

சீன செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை உடனே அமல்படுத்துமாறு இணைய தள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, சீனாவின் மேலும் பல செயலிகளையும், இணைய தளங்களையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி டிக்டாக், ஷேர்இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த திங்களன்று தடை விதித்தது. அதே போன்று முடக்க வேண்டிய இதர செயலிகள், ஆபாச தளங்கள் மற்றும் சீனாவின் பல இணைய தளங்களின் பட்டியலையும் தொலைத் தொடர்பு அமைச்சகம் தயாரித்து வருகிறது.

இந்தியா விதித்துள்ள தடை, சீனாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான அலிபாபா, லெனோவா, ஜியோமி (Alibaba, Xiaomi, Lenovo ) உள்ளிட்டவற்றுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசு விதித்துள்ள தடை பொருளாதார ரீதியாக, சீன நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments