நேர்மையான காவல்துறை அதிகாரிகளை சட்டம் - ஒழுங்குப் பணிகளில் நியமிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

0 2377

சாத்தான்குளம் சம்பவத்தில், பிறகும்- நேர்மையான, திறமையான காவல்துறை அதிகாரிகளை சட்டம்- ஒழுங்குப் பணிகளில் நியமிக்க வேண்டும் என்ற எண்ணம்  இல்லாதது மிகுந்த வேதனையளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளளார். 

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொலைகளை,  “உடல்நலக்குறைவால் மரணம்” என்று முதலமைச்சர்  கூறி  விட்டதாக அறிக்கை ஒன்றில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி  302 ஆம் பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து,  சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை கைது செய்து, அவர்களுக்கு உதவியாக இருந்த  அனைவரையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சரை ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments