கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா உச்சம் எட்டிய அச்சம்

0 3499

இந்தியாவில் கொரோனா பாதிப்பு, ஐந்தரை லட்சத்தை தாண்டி விட்டது.  அதே நேரம், 3 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.  

இந்தியாவில் அச்சம் எட்டும் வகையில் உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு, சில குறிப்பிட்ட மாநிலங்களில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

மஹாராஷ்டிராவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்தை தாண்டி விட்டது.

தமிழகத்திலும் இதுவரை இல்லாத அளவில் கொரோனா புதிய உச்சம் எட்டி, 86 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

டெல்லியில், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 83 ஆயிரத்தை தாண்டி விட்டது.

குஜராத்தை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு 31ஆயிரத்தை தாண்ட, உத்தரபிரதேசத்தில் பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்குகிறது.

மேற்கு வங்காளத்தில் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, ராஜஸ்தானில் 17 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், மத்திய பிரதேசத்தில் 13 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கேரளாவைப் பொறுத்தவரை, ஒரே நாளில் 121 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. மொத்தத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு, 5 லட்சத்து 54 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேநேரம், கொரோனா உயிர்ப்பலி,16 ஆயிரத்து 566 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா புதிய உச்சம் எட்டினாலும், வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை, சுமார் 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.

சுமார் 2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments