ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை முறையாக விசாரிக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்

0 2021

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் முதலமைச்சர் எதனடிப்படையில் சொன்னார்? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறு அரசின் பக்கம் என்றுதானே அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்? என்றும், இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா? என்றும் அவர் வினவியுள்ளார். காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுமாறும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும்!#JusticeforJayarajAndBennix#ArrestKillersOfJayarajAndBennix

— M.K.Stalin (@mkstalin) June 27, 2020 ">

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments