ஐநா.சபை 75வது ஆண்டு விழா பிரகடனம் தாமதம்

0 459
சீனாவின் ஆட்சேபகரமான வாசகத்தால் 6 நாடுகள் எதிர்ப்பு

சீனாவின் சர்ச்சைக்குரிய வாக்கியத்துக்கு இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட ஆறுநாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் ஐநா.சபையின் 75வது ஆண்டு வைரவிழா பிரகடனம் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

மனிதகுலத்தின் பொதுவான எதிர்காலத்திற்கான பகிர்வு கண்ணோட்டம் என்ற வாசகம் அந்தப் பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சொற்றொடர் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளுடன் தொடர்புடையது என்பதால் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, கனடா ஆகிய நாடுகள் ஆட்சேபம் தெரிவித்தன.

இதன் காரணமாக ஜூன் 26ம்தேதி ஐநா.சபையின் ((வெள்ளிவிழா)) பிரகடனம் வெளியாகவில்லை. சர்ச்சைக்குரிய வாக்கியம் திருத்தப்பட்டு மாற்று வாக்கியத்துக்கு ஒருமித்த ஒப்புதல் கிடைத்ததும் ஐநாசபை பிரகடனம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments