விதிகளுக்கு உட்பட்டு ரத யாத்திரை நடத்த பூரியில் 41 மணி நேர ஊரடங்கு

0 1250

ஒடிசா மாநிலம் பூரி ரத யாத்திரையை விதிகளுக்கு உட்பட்டு நடத்த அங்கு 41 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் திரளும் ரதயாத்திரையை இந்த ஆண்டு கொரோனாவால் பக்தர்கள் கூட்டமின்றி நடத்திக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இன்று ரத யாத்திரை நடைபெறும் நிலையில் நேற்று இரவு 9 மணி முதல் நாளை பிற்பகல் 2 மணி வரை பூரி மாவட்டத்துக்குள் ரயில்கள், பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர் பவனி வரும் கிராண்ட் ரோடு பகுதியில் பொதுமக்கள் நுழைந்துவிடாத வகையில் 50 கம்பெனி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேரை இழுப்போர் பரிசோதிக்கப்பட்டு அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர்.

பாரம்பரியத்துடன் மக்களின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதால் திருவிழா நடவடிக்கைகளில் பங்கேற்கும் அனைவரும் விதிகளை துல்லியமாக கடைபிடிக்க முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments