மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் துலாக்கட்டத்தை வந்தடைந்தது

0 1104
மயிலாடுதுறை துலாக்கட்டத்துக்கு வந்து சேர்ந்த காவிரி நீரைப் பொதுமக்கள் நவதானியங்கள் தூவிக் கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் கல்லணை வழியாக மயிலாடுதுறையின் துலாக் கட்டத்தை வந்தடைந்தது.

ஐப்பசி மாதத்தில் பொதுமக்கள் புனித நீராடும் இடம் துலாக்கட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த துலாக்கட்டத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் ஆற்றில் இறங்கிநவதானியங்கள் தூவிக் கும்ப மரியாதையுடன் வழிபாடு செய்து காவிரி நீரை வரவேற்றனர்.

இதில் நாடகக் கலைஞர்கள் விநாயகர், முருகன், சிவன், பார்வதி, அகத்தியர், வள்ளுவர், காவிரித்தாய் ஆகிய வேடமணிந்து பங்கேற்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments