ஏர் இந்தியா விமானிகளின் சம்பளம் குறைகிறது?

0 2061

விமானிகளின் சம்பளத்தை குறைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏர் இந்தியா விமானிகளுக்கு அடிப்படை ஊதியம் தவிர 70 மணி நேர பறக்கும் அலவன்சும், ஓவர்டைம் படிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

கொரோனாவால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, ஏர் இந்தியா கடுமையான வர்த்தக இழப்பை சந்தித்து வருகிறது. இதை அடுத்து விமானிகளின் பறக்கும் அலவன்சை 30 முதல் 35 மணி தேரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பரிந்துரை விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விமானிகளின் சம்பளத்தில் 70 சதவிகிதம் பறக்கும் அலவன்சுகளால் ஆனது என்பதால், இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால், அவர்களின் சம்பளம் கணிசமாக குறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments