சீனா முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது-அமைச்சர் ஜெய்சங்கர்

0 5118

இந்தியா மீது, சீனா முன்கூட்டியே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

லடாக் பகுதியின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நிகழ்ந்த மோதல் காரணமாக பதற்றம் எழுந்துள்ள சூழலில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ - ஐயுடன், மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் , தொலைபேசியில் பேச்சு நடத்தினார்.

அப்போது, மோதல் மற்றும் உயிர்ப்பலிக்கு சீனா நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்திய ஜெய்சங்கர், நிகழ்ந்த சம்பவத்திற்கு தமது கவலையை பதிவு செய்தார்.

சீனாவின் இத்தகையை நடவடிக்கைகள், இரு நாடுகளுக்கு இடையேயான ராஜீய உறவை சீர்குலைத்து விடும் என எச்சரித்த ஜெய்சங்கர், நிலைமைகளை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சீன வெளியுறவு அமைச்சரைக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments