ஊரடங்கு கால நிவாரண நிதியாக மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிதி

0 873

தமிழகத்தில் அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரண நிதியாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், குடும்ப அட்டைதாரர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என பலருக்கும் தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில், ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13லட்சத்து 35ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments